மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.இதனிடையே 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெகபூபா முஃப்தி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்ற அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நான் அரசை கேட்டுக்கொள்கிறேன்.இந்த நேரத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜனநாயக செயல்முறைகளும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…