நான் மக்களை ஏமாற்ற தயாராக இல்லை – சீமான்
இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து இந்த தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூரில் தேரடி, பர்மா காலனி, போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் இலவசங்கள் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்த போவதாகவும், அரசு பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்க போவதாகவும் உறுதியளித்தார். மேலும் பேசிய அவர், இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.