மதுரை காவல் ஆணையருக்கு தான் சாக போவதாக பேசி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியாதேவி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வசிக்கும் சூர்யா தேவி என்பவர், சமூகவலைத்தளங்களில், அரசியல், சினிமா நடிகைகள் மற்றும் டிக்டாக் பிரபலங்களை;’/. விமர்சித்து வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் விளம்பரம் தேடி வந்தார்.
இந்நிலையில், சூர்யா தேவியின் ஆண் நண்பரான சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, சூர்யா தேவி மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சூர்யா தேவியை போலீசார் தேடி வந்த நிலையில், சூர்யா தேவி தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக மதுரை காவல் ஆணையருக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் தனது வீட்டில் உட்பக்கம் தாழிட்டு, மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொள்வது போல், கட்டிவைத்துவிட்டு, அங்கிருந்த கட்டிலில், சூர்யா தேவி, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த போலீசார் இதுவும் ஒரு தற்கொலை நாடகம் தானா? என போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, தான் மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யா தேவியை ஆறுதல்படுத்திய போலீசார், அருகில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…