தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்து ஆதம்பாக்கத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் எனும் தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி, கோஆப் டெக்ஸில் இருந்த போதும் சரி, பல சாதனைகளை புரிந்த போதும் தமிழக அரசு என்னை அவமதித்துவிட்டது.
சுடுகாட்டில் படுத்திருக்க வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா என்று கேள்வி எழுப்புய அவர், அங்கிருக்கும் ஆவிகளை விட ஊழல் செய்யும் பாவிகள் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் எனவும் ஊக்கமளித்துள்ளார்.
மேலும், ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் போன்று நேர்மையாக இருக்கவேண்டும் என்று கூறிய சகாயம், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவைகளுக்கு எதிராக தனது நேர்மையை கையாண்டார்.
இதுபோன்று ஒரு நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இவர் பணியாற்றும் இடங்களில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனும் வாசகத்தை எழுதி வைத்திருந்தார். இவரது சேவையால் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தான் அரசியலுக்கு வருவதாகவும், ஊழல் என்ற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…