இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு

Default Image

தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார்.

சென்னையை அடுத்து ஆதம்பாக்கத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் எனும் தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி, கோஆப் டெக்ஸில் இருந்த போதும் சரி, பல சாதனைகளை புரிந்த போதும் தமிழக அரசு என்னை அவமதித்துவிட்டது.

சுடுகாட்டில் படுத்திருக்க வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா என்று கேள்வி எழுப்புய அவர், அங்கிருக்கும் ஆவிகளை விட ஊழல் செய்யும் பாவிகள் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் எனவும் ஊக்கமளித்துள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் போன்று நேர்மையாக இருக்கவேண்டும் என்று கூறிய சகாயம், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவைகளுக்கு எதிராக தனது நேர்மையை கையாண்டார்.

இதுபோன்று ஒரு நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இவர் பணியாற்றும் இடங்களில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனும் வாசகத்தை எழுதி வைத்திருந்தார். இவரது சேவையால் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தான் அரசியலுக்கு வருவதாகவும், ஊழல் என்ற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்