சட்ட விரோத பேனர்கள் ! ரோந்து வாகனம் இயக்கப்படும்! மாநகராட்சி அறிவிப்பு

Default Image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஸ்கூட்டியில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் பேனர் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும். சென்னை காவல் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் .பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் இயக்கப்படும்.மண்டலங்களை வட்டாரங்களாக பிரித்து ரோந்து வாகனம் இயக்கப்படும்.94451 90205, 94451 90698, 94451 94802 ஆகிய தனி அலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்