முதல்வரானால் நான் நேர்மையாக இருப்பேன் – கமல்ஹாசன்

Default Image

முதல்வரானால் நான் நேர்மையாக இருப்பேன்  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அப்துல் கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை, அவரை எல்லாருடைய நெஞ்சிலும் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம்.தலைவர் என்று சொல்வதில் அகந்தை உள்ளது தோழர் என்று சொல்லும்போது தொடர்ச்சி உள்ளது.
புத்தரும், கலாமும் ஒன்றுதான்.நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம் அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது;கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி.
மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்,வரவேற்பேன்.விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள்.முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
முதல்வரானால் நான் நேர்மையாக இருப்பேன்.யார் வந்தாலும் இருக்க வேண்டும் முதல்வரானவுடன் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம்.நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்