நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். – அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.
இதற்கு பலரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் திரைத்துறையில் ரஜினி, கமல் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி இளையராஜா தனது வாழ்த்துக்களை தற்போது ஆடியோ வடிவில் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்ற திருக்குறளை கூறி, நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். அமைச்சர் பதவி என்பதால் பொறுப்பு அதிகமாகியுள்ளது. அதனை நீங்கள் சிறப்பாக செயல்படுத்துவீர்கள் என கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…