சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இளையபெருமாளின் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் உரை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்போது, தீண்டாமை ஒழிப்பதற்காக போரடியாக இளையபெருமாளின் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் கூறுகையில், இளையபெருமாள் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்.
இளையபெருமாள் முயற்சியால் தான் சிதம்பரத்தில் இரட்டை பானை முறை முடிவுக்கு வந்தது. பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருபது ஆண்டுகளும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள். மிகப்பெரிய சமூக போராட்டத்தை திகழ்தியவர் அவர். தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்ட வேண்டும்.
அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும் என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம். பிற்காலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடித்தளமாக இருந்தது இளையபெருமாள் அறிக்கைதான். பெரியவர் இளையபெருமாளுக்கு கடலூர் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…