#BREAKING: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்..!
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் நியமனம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76) தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார். இதற்கு முன் தமிழக முன்னாள் பாஜக தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் பாஜகவை சார்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.