இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இதே போல எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளது இலங்கை நீதிமன்றம்.
அந்த 7 மீனவர்களும் தற்போது இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2,3 தினங்களில் அவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் வந்த படகு குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…