கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் இன்டெர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்தபோது, அதில், பாத்திமா, தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள் காரணம் என அவர் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ( SFI ) ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முனைந்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட SFI மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…