#BREAKING: ஐஐடி மாணவி பாலியல் வழக்கு- குற்றவாளிக்கு சம்மன்..!

ஐஐடி மாணவி பாலியல் வழக்கில் முதல் குற்றவாளி வரும் 31ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனால், 8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் கைது செய்தனர்.
கிங்சோ ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருந்ததால் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட கிங்சோ விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கிங்சோ தெப்சர்மாவை வரும் 31ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025