ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரிக்கக்கோரி மனு
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது .தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு விசாரிக்க தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.