கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்தார்.இவர் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கு இடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடரப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.பின்னர் பாத்திமாவின் தந்தை ,பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து தமிழக அரசு பாத்திமாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.இந்நிலையில் பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ. இயற்கைக்கு மாறான மரணம் (174) என்ற பிரிவில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…