கொரோனா வார்டாக மாற்ற விடுதியை வழங்கிய ஐஐடி.!

Default Image

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகள் கூடுதலாக தேவைப்படும் நேரத்தில்,  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) சென்னை ஐஐடி நிறுவனத்தினிடம் கேட்டதன் அடிப்படியில், தற்போது நிறுவனத்தில் உள்ள விடுதி ஒன்றை அளிப்பதாக ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐஐடி நிறுவனத்தில் உள்ளே இருக்கும் சபர்மத் மகாநதி விடுதியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதனிடையே அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பொருட்களை பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்து, கடந்த 24 மணிநேரத்தில் சுத்தம் செய்த பிறகு, தற்போது அந்த விடுதியை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வார்டுகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.  இது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் செய்யப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்