சென்னை ஐஐடியில் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படப்பிடிப்பை பயில்வதற்கு தேசிய அளவிலான ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும். ஆனால் தற்போது சென்னை ஐஐடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புலோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (பிஎஸ்சி) என்ற இணையவழி படிப்பிற்கு ஜேஇஇ தேர்வு எழுத தேவையில்லை. இந்த முறையை 2020-2021ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலை பட்டம் என்ற மூன்று நிலைகளை கொண்ட இந்த பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எந்த நிலையிலும் வெளியேறலாம் என்றும், அவர்கள் படித்த நிலைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வேறு கல்லூரிகளில் பிற பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்களும் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பை படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த பிற விவரங்களை அறிய www.onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…