பெண் என்பதால் விளையாட்டில் புறக்கணிப்பதா..? நீதிமன்றம் கேள்வி ..!
தகுதிப் போட்டியில் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா..? என உச்சநீதிமன்றம் கேள்வி.
போலந்து நாட்டில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு குமரியை சார்ந்த செவித்திறன் குறையுடைய சமீஹா பர்வீன் தகுதி பெற்றார். தகுதி பெற்றவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும், இவர் ஒருவர் பெண் என்பதால் அவர்களுடன் இணைத்து அனுப்ப முடியாது என்று மத்திய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால், போலாந்து சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் போட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதால் அவகாசம் அழைக்கப்பட்டால் பர்வீன் தடுக்கப்படுவார் என கருதி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தர உத்தரவிட்டார். நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தார்.