ஐஎஃப்எஸ் ரூ.4,380 கோடியும்.. ஆருத்ரா ரூ.2,125 கோடியும் மோசடி – பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி

Published by
பாலா கலியமூர்த்தி

அதிக வட்டி தருவதாக கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது என பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அறிவுறுத்தல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன், வேலூர் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ரூ.4,380 கோடி மோசடி செய்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரூ.4,380 கோடி மோசடி என்பது தற்போது சுமார் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

இதுபோன்று ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் ஒரு பகுதியை வட்டியாக தந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. 93,000 வாடிக்கையாளர்களிடம் ஆருத்ரா கோல்டுக்கு நிறுவனம் முதலீடு பெற்றுள்ளது. நிதி மோசடி செய்துள்ள ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

திருச்சி எல்பின் நிறுவனம் சுமார் ரூ.6,000 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறினார். 7,000 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் நிறுவனங்கள் சொத்து வாங்கி குவித்துள்ளது. அவற்றை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடிகளில் பல நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக 2 பேர் கைது என்றும் எல்பின் நிறுவனம் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், வங்கிகள் 5.5 சதவீத வட்டிதான் டெபாசிட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12% வட்டிதான் வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எண்ணென்றும் கூறினார்.

அதிக வட்டி தருவதாக சொல்லும் திட்டங்கள் மோசடி திட்டங்கள். விழிப்புடன் இருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது. 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக மக்களிடம் ஆசைவார்த்தை கூறி வருகின்றனர் எனவும் அறிவுறுத்தினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

11 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

12 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

12 hours ago