என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை என அண்ணாமலை பேட்டி.
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்க்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா அவர்கள் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டு இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடர் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை. அவரை விட நான் கருப்பு. அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…