தமிழில் பேசுவதால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலம் மண்டலம் மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் பாஜகவுக்கு தற்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பாஜகவுடன் கைகோர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என இயற்ககைக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறார் என்றும் குற்றசாட்டியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழ் மொழியில் பேசுவதாலும், திருக்குறளை உச்சரிப்பதாலும் தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…