விவாகரத்து வேண்டும் என்றால் குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே நாட வேண்டும் எனவும், இஸ்லாமிய அமைப்பு அளிக்கும் குலா போன்ற சான்றிதழ்கள் செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய கூட்டமைப்பான ஷரியத் கவுன்சில் போன்ற கூட்டமைப்புகளில், இஸ்லாமிய தம்பதிகளின் குடும்ப பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு, அதன் மூலம் குலா சான்றிதழ் எனப்படும் விவாகரத்து சான்றிதழையும் வழங்குவதாக கூறப்படுகிறது. அப்படி தமிழகத்தில் இஸ்லாமிய தம்பதி ஒருவருக்கு குலா சான்று 2017இல் வழங்ப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழை எதிர்த்து, குலா சான்று பெற்ற கணவர், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில் தனது மனனவி குலா சான்று வாங்கிவிட்டு, தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் , குலா சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த வழக்கு குறித்தான மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகையில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சனை குறித்த விவகாரங்களை தீர்க்க குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும். தங்கள் மத உறுப்பினர்களை கொண்ட ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்புகளை அணுகக்கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், ஷரியத் கவுன்சில் வழங்கிய குலா போன்ற சான்றுகள் நீதிமன்றத்தில் செல்லாது எனவும் உத்தரவிட்டனர். தவ்ஹீத் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் தரப்பு வாதாடுகையில், கேரள உயர்நீதிமன்றத்தில் இது போன்ற ஒரு வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டதாக குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அது அந்த பெண்னின் தரப்பு நியாயத்தை மட்டுமே குறிப்பிட்டு தீர்ப்பு வழங்ப்பட்டது. குலா போன்ற சான்றிதழை அங்கீகரிக்கவில்லை என விளக்கம் அளித்தனர்.
மேலும், குடும்ப நீதிமன்றச் சட்டம், 1984 பிரிவு 7(1)(b)ன்படி திருமணத்தை ரத்து செய்யும்(விவாகரத்து) ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், அந்த பெண் விவாகரத்து கோரினால், குடும்ப நல நீதிமன்றத்தை மட்டுமே நாட வேண்டும் எனவும் தீர்ப்பளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவராமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…