விவாகரத்து வேண்டும் என்றால் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.! இஸ்லாமிய பெண்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி.!

Default Image

விவாகரத்து வேண்டும் என்றால் குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே நாட வேண்டும் எனவும், இஸ்லாமிய அமைப்பு அளிக்கும் குலா போன்ற சான்றிதழ்கள் செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இஸ்லாமிய கூட்டமைப்பான ஷரியத் கவுன்சில் போன்ற கூட்டமைப்புகளில், இஸ்லாமிய தம்பதிகளின் குடும்ப பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு, அதன் மூலம் குலா சான்றிதழ் எனப்படும் விவாகரத்து சான்றிதழையும் வழங்குவதாக கூறப்படுகிறது. அப்படி தமிழகத்தில் இஸ்லாமிய தம்பதி ஒருவருக்கு குலா சான்று 2017இல் வழங்ப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை எதிர்த்து, குலா சான்று  பெற்ற கணவர், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில் தனது மனனவி குலா சான்று வாங்கிவிட்டு, தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் , குலா சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த வழக்கு குறித்தான மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகையில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சனை குறித்த விவகாரங்களை தீர்க்க குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும். தங்கள் மத உறுப்பினர்களை கொண்ட ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்புகளை அணுகக்கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

மேலும், ஷரியத் கவுன்சில் வழங்கிய குலா போன்ற சான்றுகள் நீதிமன்றத்தில் செல்லாது எனவும் உத்தரவிட்டனர். தவ்ஹீத் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் தரப்பு வாதாடுகையில், கேரள உயர்நீதிமன்றத்தில் இது போன்ற ஒரு வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டதாக குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அது அந்த பெண்னின் தரப்பு நியாயத்தை மட்டுமே குறிப்பிட்டு தீர்ப்பு வழங்ப்பட்டது. குலா போன்ற சான்றிதழை அங்கீகரிக்கவில்லை என விளக்கம் அளித்தனர்.

 மேலும், குடும்ப நீதிமன்றச் சட்டம், 1984 பிரிவு 7(1)(b)ன்படி திருமணத்தை ரத்து செய்யும்(விவாகரத்து) ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், அந்த பெண் விவாகரத்து கோரினால், குடும்ப நல நீதிமன்றத்தை மட்டுமே நாட வேண்டும் எனவும் தீர்ப்பளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவராமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்