மக்களின் உணர்வுகளை தமிழக ஆளுநர் புரிந்துகொண்டால் சரி.! திருமாவளவன் டிவீட்.!
‘தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.’ என பதிவிட்டுள்ளார். – திருமாவளவன் டிவீட்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் குறிப்பிடுகையில் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் சரியாக இருக்கும் என் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. இதனை அடுத்து இன்று இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அதில், காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த அறிக்கையை குறிப்பிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ தமிழ்நாடா? தமிழகமா? என அன்று விவாதத்தைக் கிளப்பியது குதர்க்கவாதம். ‘நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது’ என இன்று
விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம். தனது பிழையை உணர்ந்து வருந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக ஆளுநர். என குறிப்பிட்டு,
‘தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.’ என பதிவிட்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
நாடா? அகமா? என அன்று விவாதத்தைக் கிளப்பியது குதர்க்கவாதம்!
‘நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது’ என இன்று
விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம்!
தனது பிழையை உணர்ந்து
வருந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
ஆளுநர். தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.#RNRavi pic.twitter.com/74ClmTFotl— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 18, 2023