மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது! – அன்புமணி ராமதாஸ்
என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் கூறிய நிலையில், ஆதிகாரிகள் மக்களை மிரட்டி நிலங்களை பறிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
அந்த ட்விட்டர் பதில், என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது!
என்எல்சிக்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை. நிலங்களை வழங்க முடியாது என்ற மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் உணர வேண்டும். மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது!’ என பதிவிட்டுள்ளார்.
அங்குள்ள கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் NLC மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது..
— Sankar sadhasivam (@Sankar67257710) December 7, 2022