மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்கலாம் – முன்னாள் மின்சாரத்துறை பணியாளர் காந்தி
மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்கலாம் என முன்னாள் மின்சாரத்துறை பணியாளர் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மின்சாரத்துறை பணியாளர் காந்தி, மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மின் கட்டணத்தில் குளறுபடி இருந்தால் பணம் கட்டவேண்டிய தேதிக்கு, 3 நாளுக்கு முன்னதாகவே உதவி பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் அடிப்படையில் உதவி பொறியாளர் உங்களுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு முறை மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்யும் போது முதல் யூனிட்-ல் இருந்துதான் கணக்கெடுக்க முடியும் என்றும், கணக்கீடு செய்யப்படும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய மின்அளவு 6 ரூபாய் 60 பைசா என்ற நிலை கணக்கிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, கட்டணம் செலுத்த வேண்டிய நாள் தாண்டினால், அடுத்த மாத மின்பண்பாத்தை கணக்கிடும் போது தான், திருத்தம் செய்ய முடியும் என்றும் முன்னாள் மிசாரத்துறை பணியாளர் காந்தி தெரிவித்துள்ளார்.