தனியார் ரயிலை நடத்தினால் டிக்கெட் விலை இப்படித்தான் இருக்கும் -கமல்
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது 9 மாதங்களுக்குப் பிறகு ஊட்டி வரை மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் ரயில் இயக்கபபட்டது.
தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திற்கு இந்த ரயில் சேவையை தாரைவாத்துள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மலை ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை கட்டணம் தனியாரிடம் கொடுத்தபிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கட்டணம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2020
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.