பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.எனேவ மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை தெருக்களில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தவகையில் தான் சென்னையில் 5 இடங்களில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதாவது ‘‘மீன்கள்’’ என்ற செயலி மூலமாக வீடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆழ்வார்பேட்டை,அண்ணாநகர், சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய 5 இடங்களில் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘மீன்கள்’’ செயலி மூலம்மீன்களை வீடுகளுக்கே நேரில் பெற வேண்டுமானால் தங்களுடையை தேவையை குறிப்பிட வேண்டும்.‘மீன்கள் டாட் காம்’’-ல் மீன் வகைகள் தேவைகள் குறித்து ‘ விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.செயலியை பயன்படுத்தி ஆர்டர் கொடுத்தால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.