ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பு தீ குளிப்போம் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
உயிரிந்தவர்களின் உறவினர்கள் பேட்டி :
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இந்த பேட்டியில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது வேடிக்கை பார்க்க சென்றவர்களை கூட சுட்டு கொன்றுள்ளனர். இறந்த பிறகு கூட அவர்களது உடல்களை பார்க்க அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு :
ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு எதிராக போராடுபவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தான் அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி நீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால், தூத்துக்குடியில் மேலும் பல உயிர்கள் போகும் என்றும், மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பாக தீக்குளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
பொது வாக்கெடுப்பு :
எங்களது உயிர் உள்ளவரை ஆலையை திறக்க விடமாட்டோம். எங்களது குடும்பத்தை சீர்குலைத்த ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என்றும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருப்பதாக கூறினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என முடிவெடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…