இனி வெண்ணை உருண்டையை பார்க்கணுனா காசு கொடுக்கணும்..!

மாமல்லபுரம் தமிழகத்தின் முக்கிய வரலாற்று அடையாளமாக உள்ளது.சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் வந்து அங்கு உள்ள சிற்பங்களைப் பார்வையிட்டு பல்லவர்களின் கலை நயத்தை பார்த்து பாராட்டினார். ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள சில இடங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.அதில் கடற்கரைக் கோவில், கலங்கரை விளக்கம் போன்றவை அடங்கும்.இந்நிலையில் தற்போது கட்டண பட்டியலில் வெண்ணை உருண்டை பறையையும் இணைந்து உள்ளது.
இந்த பாறைக்கு இதற்கு முன் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக தான் பார்த்து வந்தனர். ஆனால் நேற்று முதல் ரூ. 40 கட்டணம் என கூறப்படுகிறது. இந்த செய்தி சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாறைக்கு முன்பு நின்று ஜின்பிங், மோடி இருவரும் தங்கள் கைகளை இணைத்து , கையை உயர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.