அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது – கே.எஸ்.அழகிரி
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது என கே.எஸ்.அழகிரி விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். #DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எழும்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது கூட பிரச்னை இல்லை; அவர்கள் செய்த விதம் தான் தவறு, அதைத்தான் எதிர்க்கிறோம். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது என விமர்சித்துள்ளளார்.