தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை..! அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை..!

Published by
செந்தில்குமார்

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி,  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தக்காளி விலையேற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் தக்காளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தக்காளிகளை கொள்முதல் விலைக்கே வழங்குவதற்கு, தமிழகத்தில் உள்ள 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி மற்றும் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் நுகர்வோருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரில் தக்காளி விலை கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது. இதற்கிடையில், சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 லிருந்து ரூ.68 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

6 minutes ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

38 minutes ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

1 hour ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

2 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

4 hours ago

பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…

4 hours ago