கொலை, கொள்ளை என்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள் என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மின்சார கட்டண உயர்வை எதிர்த்து இபிஎஸ் போராட்டம் அறிவித்தார்.எப்போதெல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் திமுக ரெய்டு விடுகிறது.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என எண்ணக்கூடாது. கொலை, கொள்ளை என்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள்; சொத்து வரி, மின் கட்டணம் போன்ற பல்வேறு பிரச்னைகளை பேச விடாமல் தடுக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகிறது இந்த ரெய்டு என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…