உஷார்…”இந்த APP வைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள்” – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது:
“ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் உங்களது கான்டக்ட்(Contact) வரிசையில் உள்ள நான்கு பேரின் விவரங்கள் மற்றும் இமெயில் உள்ளிட்ட விவரங்களை கேட்பார்கள்.பிறகு உங்களுக்கு மூவாயிரம் அல்லது நான்காயிரம் லோனும் கொடுத்து விடுவார்கள்.
அதன்பிறகு,நீங்கள் அனுப்பிய போட்டவை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து,அதை உங்களுக்கு அனுப்பி நீங்கள் எங்களுக்கு ரூ.10,000 பணம் கொடுங்கள்.இல்லையெனில் இந்த மார்பிங் செய்த போட்டவை உங்கள் கான்டக்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என்று பயமுறுத்தி 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார்கள். இதனால் உங்களது நிம்மதி போய்விடும்.இந்த போட்டவை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற பயம் வந்து விடும்.
இதனால்,முறைகேட்டில் ஈடுபடும் லோன் ஆப்களை முடக்குவதற்கு காவல்துறை முயற்சித்து வருகிறது.எனினும்,பல்வேறு ஆப்கள் தொடர்ந்து வருகின்றன.எனினும்,யுவால்ட்,மேசன் ருபீ,லார்ரி லோன்,விங்கோ லோன், சிசி லோன் உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்,அவ்வாறு செய்திருந்தால் அவற்றை உடனே நீக்கி(Delete) விடுங்கள்”,என்று எச்சரித்துள்ளார்.