கொரோனா அறிகுறி தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையை அணுகுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!
கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். எத்தனை பேருக்கு இருக்கிறது என்று எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.