இந்த “11 ஆவணங்கள்” இருந்தால் தேர்தலில் வாக்களிக்கலாம்.! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Default Image
  • வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோருக்கு ஓர் அறிவிப்பு.
  • 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாகும், அந்த அட்டையை வைத்துதான் நம் ஓட்டை பதிவிட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். அதற்காகத்தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த 11 ஆவணங்களை காட்டி நீங்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என அறிவித்தது. அதாவது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 100 நாள் பணி கார்டு, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், மற்றும் வாக்காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர்  இதுதொடர்பான சட்டபூர்வ ஆணையையும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்