“பூமித்தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால்”…….. – எம்.பி கனிமொழி ..!

Default Image

பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ  வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின்னர்,பேசிய எம்.பி கனிமொழி அவர்கள் ,”தற்போது உள்ள காலநிலை மாற்றம் என்பது நாம் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய நிலையில் இல்லை.காரணம்,இது நமது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை பாதிக்கக்கூடிய சூழலை உருவாக்கிவிடும்.ஏனெனில்,ஐபிசிசி ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதிகள் வெப்ப மயத்தின் காரணமாக பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனினும்,தமிழக அரசு தனது பட்ஜெட்டில் இந்த காலநிலை மாற்றத்தை கண்காணிப்பதற்காக தனி நிதியை ஒதுக்கியுள்ளது.” என்று கூறிய நிலையில்,“பூமித்தாய் என்று சொல்லாமல், பூமி தந்தை என்று  சொல்லியிருந்தால் ஒருவேலை இயற்கைய அழிக்காமல் இருந்திருப்போமோ? என்னவோ!”,என்றும் கேள்வியெழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து,செய்தியாளர்கள் சந்திப்பில் எம்பி திருமாவளவன் கூறுகையில், “மனிதக்குலத்தின் செயல்பாடுகள் காரணமாகவே, புவி வெப்பமடைகிறது.இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கைகள்  நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசப்படும்.மேலும், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை பாடப்புத்தகத்தில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்