ஒரு மாதத்துக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால், மை பூசி அழிப்போம் – ராமதாஸ்
வணிகர்கள், ஒரு மாதத்தில் பெயர் பலகையை தமிழில் மாற்றாவிட்டால், கருப்பு மை கொண்டு வேற்று மொழி பெயர்களை அழிப்போம் என ராமதாஸ் எச்சரிக்கை.
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி பரப்புரை பயணத்தை சென்னையில் இருந்து மதுரை வரை தொடங்கியுள்ளார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தமிழ் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
கருப்பு மை கொண்டு வேற்று மொழி பெயர்களை அழிப்போம்
இந்த நிலையில், திருச்சியில் நடந்த ‘தமிழைத்தேடி’ பரப்புரையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை வேற்று மொழியில் வைத்திருக்கும் வணிகர்கள், ஒரு மாதத்தில் பெயர் பலகையை தமிழில் மாற்றாவிட்டால், கருப்பு மை கொண்டு வேற்று மொழி பெயர்களை அழிப்போம் என தெரிவித்துள்ளார்.