என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்!நான் பேசியது உண்மைதான்-தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியானது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் கோழைத்தனமாகவும். ஆணவத்தோடும் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அழிந்து போவார் என்றும் கோபத்துடன் கூறினார் .மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தேனியில் போட்டியிட வைத்தது திட்டமிட்ட சதி என்று கூறினார்.
இதனால் இருவருக்குமான மோதல் வெளியில் வந்தது. இந்த நிலையில் டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும் என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025