நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

Supreme court: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் இழந்த எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி பொன்முடிக்கு மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

Read More – 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், 24 தொகுதிகளில் தாமரை சின்னம்.! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

அந்தவகையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்என் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, பொன்முடிக்கு தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் விடுதலை செய்யவில்லை, நிரபராதி என்று கூறவில்லை என கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நடைபெற்றது. அப்போது, தமிழக ஆளுநரின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தலைமை நீதிபதி, சரமாரியாக கேள்வி கண்டங்களை தெரிவித்தார். தலைமை நீதிபதி கூறியதாவது, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.!

தமிழ்நாட்டின் ஆளுநர் என்ன செய்து கொண்டுள்ளார். பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாநில முதல்வர் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்.  முதலமைச்சர் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்கிறாரா?.  ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. அதுவும் குற்றவாளி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த நபர் குற்றவாளி இல்லையென்றே அர்த்தம்.

அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். நாங்கள் கண்களை மூடவில்லை, அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளது.  பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று எந்த அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்.

Read More – மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா?, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடக்கிறாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, பொன்முடி விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்.  அதன்படி, நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அதாவது, பொன்முடி விவகாரத்தில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம் என்று  தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளதை அடுத்து பொன்முடிக்கு இன்று அல்லது நாளை தமிழ்நாடு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

50 minutes ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

2 hours ago

ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?

இஸ்ரேல்:  ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…

2 hours ago

சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…

3 hours ago