மாஸ்க் அணியாமல் நடந்தால் ரூ.100 அபராதம்..ஓட்டினால் வாகனம் பறிமுதல்.!
சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் உத்தரவை மீறும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனேவே சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது மாஸ்க் அணியாமல் வெளியே நடந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை முதல்வர் பழனிசாமி ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார். இதையடுத்து நேற்று காணொளிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.