ரயில் பெட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லாவிடில் எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கலாம் …!
ரயில் பெட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லாவிடில் 9821736069-ல் எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெற்கு ரயில்வேபொதுமேலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வேபொதுமேலாளர் தாக்கல் செய்த அறிக்கையில்,ரயில் பெட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லாவிடில் 9821736069-ல் எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கலாம்.ரயில்பெட்டிகளில் பராமரிப்பு,உணவு,அடிப்படைவசதிகள் குறித்து 138என்ற எண்ணிற்கு பயணிகள்அழைக்கலாம்.ரயில் நிலையங்கள், ரயில்களை பராமரிக்காத அதிகாரிகள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .