ஆதாரம் இல்லாமல் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை.! தேர்தல் அலுவலர் எச்சரிக்கை.!

Default Image

அடிப்படை ஆதாரமில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார் அளித்தால் முதலில் விசாரிக்கப்படும். அவர் கூறுவது பொய்யாக இருந்தால் புகார் கூறியவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவார். – தேர்தல் அலுவலர் சிவகுமார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குபதிவு நிலவரம் குறித்தும், புகார்கள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்,  6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெரும். 6 மணி வரை வாக்கு சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் டோக்கன்வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு நன்றாக இருக்கிறது. 1,400  வாக்களர்கள் இருக்கும் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாமதம் ஏற்படும்.  700, 800 வாக்காளர்கள் இருக்கும் வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாக இருக்கும்.

அடுத்து வெளியூர்காரர்கள் இன்னும் ஈரோட்டில் இருக்கிறார்களே என கேட்டதற்கு, அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வாக்குபதிவு நவீன இயந்திரங்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை என கூறினார்.

அடிப்படை ஆதாரமில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார் அளித்தால் முதலில் விசாரிக்கப்படும். அவர் கூறுவது பொய்யாக இருந்தால் புகார் கூறியவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவார் என கூறினார். மேலும், தேர்தல் மையானது அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த கூடிய மை தான். எனவும் விளக்கம் அளித்தார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் சிவகுமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்