ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.
திருச்சி மாவட்டம் நீதிமன்றம் அருகே ஹீபர் ரோட்டில், கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு பேக்கரி திறக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் கேக்குகள் 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பலவிதமான கேக்குகள் விற்பனைக்கு உள்ளது.
இந்நிலையில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பேக்கரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு பெட்ரோலுக்கான கூப்பனை பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சென்று, அந்த கூப்பனை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம்.
இச்சலுகை குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் அவர்கள் கூறுகையில், இந்த சலுகை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என்றும், பெட்ரோல் விலை தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி என்றும், இந்த சலுகை ஒரு மாதம் வரை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…