இனி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வந்தால் அபராதம் – ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் மனுதாரர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என தெரிவித்தனர்.
திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளித்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்த நிலையில், கரூர் சிந்தாமணிப்பட்டியில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.