அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமாவுடன் கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை. எல்லா கட்சிகளிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும். இடஒதுக்கீடு விஷயத்தில் எந்த சூழலில் எதை செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என கூறியுள்ளார். சென்ற இடமெல்லாம் மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது. அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார். நிதிநிலையை பொருத்து அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்யும். கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் நடந்தாலும் தமிழகத்தில் செய்யவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. அதிமுக வேறு, அமமுக வேறு, தினகரன் தொடர்ந்து மூக்கை நுழைத்து பார்க்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஏதும் நிச்சயம் நடக்காது.
அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விருப்பப்பட்டால் அதனை தலைமை முடிவு செய்யும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தினகரன் குறித்து தான் அதிகம் பேசுறீங்க, சசிகலா பற்றி ஏதும் பேசமாற்றிங்க என்ற கேள்விக்கு, கட்சியில் இல்லாதவரை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும் என கூறியுள்ளார். தினகரன் தான் தலையிட்டு 18 எம்எல்க்களை பிரித்து, அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால், கட்சியை உடைக்கவும், கலைக்கவும் முடியவில்லை. பின்னர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதனால் தான் அவரை பேசிக்கொண்டு இருக்கிறோம் என பதில் கூறியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை. அதிமுகவில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நிர்வாகிகளை நீக்கத்தான் செய்வோம். கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டி அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார் என வேலுமணி பேசியதற்கு முதல்வர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வரிடம், திமுகதான் பொது எதிரி அவர்களை சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார் என்று கேள்விக்கு, அது அவருடைய கருத்து, இதற்கு நாங்கள் எப்படி சொல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் வழக்குகளை விசாரிக்க ஏற்கனவே தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளது. ஸ்டாலின் அறியாமையால் பேசுகிறார். எங்கள் கட்சியை பற்றி துரைமுருகன் கவலைப்பட அவசியமில்லை. அவர் கட்சியை முதலில் பார்க்க சொல்லுங்கள். அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள். நாங்கள் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…