திருவாரூரில் காரை நிறுத்தி மாணவர்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின்..!
திருவாரூரில் மாணவர்கள் அளித்த மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காரை நிறுத்திபெற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளார். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வையிட்டார்.
மாணவர்கள் மனு
நேற்று திருவாரூரில் அரசு பணிகளை ஆய்வு செய்து விட்டு, அதன் பிறகு திருவாரூர் கமலாலயம் குளத்திற்கு சென்றார். இந்த நிலையில் இன்று சாலை வழியாக காரில் சென்ற முதல்வரிடம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாணவர்கள் மனு அளித்தனர். மாணவர்கள் அளித்த மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காரை நிறுத்திபெற்றுக்கொண்டார்.