விஜய் முதலமைச்சர் ஆனால் இன்னும் முக்கியத்துவம் கொடுப்பாரு – நாங்குநேரி சின்னதுரை!
சென்னை: இந்த விழா தொடக்கத்தில் விஜய், கடந்த ஆண்டு ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அதன்பின் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பில் சாதித்த மாணவனான நாங்குநேரி சின்னத்துரையை சென்று முதன்முதலில் சந்தித்து, அவரை நலம் விசாரித்து அவர் அருகில் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன்பின் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்து பெற்றோர்களுடன் கலகலப்பாக பேசியதுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் மேடையில் விஜய் பேசி இருந்தார்.
அதன்பின் நாங்குநேரி சின்னத்துரை பேட்டி அளித்திருந்தார். அதில், “விஜய் சாரை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய ஒரு நடிகரை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன். எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரும் இப்படி படிப்புக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்தது இல்லை.
வரும் 2026-ம் ஆண்டு அவர் தேர்தலில் நிற்கிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் முதலைமச்சர் ஆனால் இதை விட அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார் என நான் நம்பிகிறேன்”, என்று கூறி இருந்தார்.