நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன..? -நீதிபதிகள்..!
ஐகோர்ட்டில் தேங்கிய நீரை அகற்ற கூறியும் இதுவரை ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை புதுதாமரைபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார். அதில், வையை நீர் செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு இரண்டு வாரத்தில் அகற்றப் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற தவறும்பட்சத்தில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தனர். இந்த, வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீரை அகற்ற நேரில் அழைத்து அறிவுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட்டில் தேங்கிய நீரை அகற்ற கூறியும் இதுவரை ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.