ஒரு காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆடு திருடியவர்களை பிடிக்க,விரட்டிச் சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கடமை தவறாத காவல் அதிகாரி பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…